அதற்கு முன் தினம் தான் டெல்லியை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு நடந்திருந்தது. நடிகர், நடிகைகளைத் தவிர வேறு யாரையும் பார்ப்பதற்காக தங்கள் பொன்னன நேரத்தை வீணாக்கும் எண்ணம் இல்லாதவர்கள் தமிழர்கள். அதிலும் குண்டு வெடிப்பு வேறு. இருந்தாலும் கூட்டம் வரும் என்று நினைத்து மாலை 6.30 மணி விழாவிற்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் மூத்த பேராசிரியரான திரு.நாச்சிமுத்து அவர்களுடன் அரங்கத்திற்கு 5.30 க்கே சென்று விட்டேன். எதிர்பார்த்ததைப் போலவே அந்த நேரத்திற்கே பாதி அரங்கம் நிரம்பியிருந்தது. காரணம் இரண்டு, ஒன்று விழாவின் நாயகன் அப்துல் கலாம் என்பது, இரண்டு விழாவை நடத்துவது வடக்கு வாசல். விழா தொடங்கிய போது பலர் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தனர். |