vadakkuvaasal@gmail.com
 

Vadakku Vasal
இளையோரின் இசை வழிபாடு

 

தில்லி முழுதும்  கார்த்திகை மாதத்தில் அய்யப்ப சுவாமிக்கு மண்டல பூஜைகள் பல இடங்களில் மிகவும் சிறப்பாக   நடந்து வருகின்றன.

21 நவம்பர் 2009 அன்று புது டெல்லி, மயூர்விஹார் Phase-3 அய்யப்பன் ஆலயத்தில் திருமதி வசந்தா சுந்தரம் மற்றும் அவருடைய மாணவ மாணவிகளின்  இசை நிகழ்ச்சி சிறப்பாக  நடைபெற்றது.

முதாகராக்த மோதகத்தில் துவங்கி   ’வா முருகா வா வடிவழகா’ என    ஒவ்வொரு கடவுள் மேலும் மிகவும் அருமையான வகையில் பாடினார்கள்.    அய்யப்பனை இசையால் அர்ச்சித்து  ’கோடி கோடி நமஸ்காரங்கள் ஐயனுட பாதத்தில்’ என்று சமர்ப்பித்தார்கள்  மாணவ மாணவிகள்.

கோவிலைச் சேர்ந்தவர்களும் மற்றும் இசை ரசிகர்களும் அந்த இளம் கலைஞர்களை மேன்மேலும் கலையில் சிறந்து
விளங்க வாழ்த்தினர்.

செய்தி - முத்துலட்சுமி


Copyright©2008 VadakkuVaasal All Rights Reserved

Powered By Purple Rain